அச்சுவேலி மத்திய கல்லூரியில் கனடிய உபகரணங்கள் திருட்டு! பொலிஸார் தீவிர விசாரணை - Yarl Voice அச்சுவேலி மத்திய கல்லூரியில் கனடிய உபகரணங்கள் திருட்டு! பொலிஸார் தீவிர விசாரணை - Yarl Voice

அச்சுவேலி மத்திய கல்லூரியில் கனடிய உபகரணங்கள் திருட்டு! பொலிஸார் தீவிர விசாரணை




யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) உள்ள கணினி உபகரணங்கள் நேற்று மாலை இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளன.


பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட மின் வெட்டினை வாய்ப்பாக பயன்படுத்தி பாடசாலையின் கதவு ஜன்னல் உடைக்கப்பட்டு கணினி உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.


பாடசாலையின் கண்காணிப்பு கமரா மின் துண்டிப்பினால் இயங்காதிருந்த வேளையில் குறித்த திருட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கொரோனா காலத்தின் போதும் பாடசாலையில் தங்கியிருந்து சிலர் அங்குள்ள பொருட்களை சூறையாடிச் சென்றனர்.

இருப்பினும் இது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் நேற்று மாலை குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற பாடசாலையின் வளாகத்தினுள் போலீசாரின் மோப்ப நாய் மற்றும் தடயவியல் போலீசார் உள்ளிட்டோர் தடயங்களை சேகரித்தனர். 


குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post