பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ் நகரில் கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த பேரணியானது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் முடிவடைந்தது.
அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், காணிகளை விடுவியுங்கள், இந்திய இழுவைமடி படகுகளை தடுத்து நிறுத்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
Post a Comment