அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு தயார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அனைத்து கட்சிகூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே புலம்பெயர் தமிழர்கள் முதலீடு செய்வதை அரசாங்கம் ஊக்குவிக்கவேண்டும்,அவர்கள் தங்கள் தாயகப்பகுதியில் முதலீடு செய்வதற்கு அரசாங்கம்ஊக்குவிக்கவேண்டும் என தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்கள் மில்லியன் கணக்கில் டொலரை முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என தெரிவித்த அவர் இலங்கையில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்யவும் அவர்கள் தயார் என குறிப்பிட்டிருந்தார்.
டயனா கமகேயின் யோசனையை ஆதரித்த சுமந்திரன் இலங்கையின் சமமான மக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கும் புலம்பெயா தமிழர்களிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதன் மூலம் இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க தயார் என சுமந்திரன் தெரிவி;த்தார்.
Post a Comment