பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்! மகளீர் தின நிகழ்வில் யாழ் அரச அதிபர் - Yarl Voice பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்! மகளீர் தின நிகழ்வில் யாழ் அரச அதிபர் - Yarl Voice

பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்! மகளீர் தின நிகழ்வில் யாழ் அரச அதிபர்




பெண்களுக்காக உழைக்க வேண்டிய தேவை இன்னும் உணரப்படுகிறது.. மகளிர் தினத்தில் அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு.

உலக நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட்டாலும் தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தேவை இன்னும் உணரப் படுகிறது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி போராட்டங்கள் பல நூறு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றமை பெண்களின் உரிமைகளை உலகறியச் செய்தது.

1913 ஆம் ஆண்டிலிருந்து பெண்களின் உரிமைகள் வலியுறுத்தப்பட்ட போதிலும் 1975 ஆம் ஆண்டு ஐநா சபை பெண்களுக்கான உரிமைகளை அங்கீகரித்தது.

இலங்கையில்  சமூகத்தில் பெண்களுடைய வகிபாகம்  நாட்டுக்கு ஊன்று சக்தியை வழங்கி வருகின்ற நிலையில் அவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

நாட்டின் முதல் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா மற்றும் முதல் பெண் ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க பதவி வகித்தமை பெண்களின் திறமையை உலகறியச் செய்தது.

 பெண்களின் திறமைகளை வெளிக் கொண்டு வந்தாலும் அனேகமான பெண்கள் இன்னும் சமூகத்தில் தமது திறமைகளை வெளிக்கொண்டு வர முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பால்நிலை சமத்துவம்  சமூகத்தில் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டும் அதிலும் பெண்களுக்கான சமத்துவத்தை சமூகத்தில்  உரிய முறையில் வழங்க வேண்டும்.

வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேல் காணப்படுகின்ற நிலையில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது ஒவ்வொருவருடைய கடமையாகும்.

அதுமட்டுமல்லாது  தேர்தல் அரசியலில் பெண்களின் வகிபாகம் குறைந்து வரும் நிலையில் பெண்களின் அரசியல் வகிபாகத்தை அதிகரிப்பதற்கு 25 சதவீத ஒதுக்கீட்டை  வழங்கினார்கள்.

ஆகவே பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொண்டு அவர்களை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் முன்வர வேண்டும் என அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ்  யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் ,யாழ் மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நிக்களஸ்பிள்ளை ,மற்றும் செயலக அதிகாரிகள் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post