நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
நாடு வங்குரோத்து நிலையில் உள்ளதுநிதியமைச்சர் நாடுநாடாகடொலருக்கு மன்றாடுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாங்கள் இது குறித்து வெட்கப்படவேண்டும்,நிதியமைச்சர் டொலர் தாருங்கள் என நாடு நாடாக சென்று இரந்து கேட்கின்றார் ரஸ்யாவிடமிருந்தும் அவர் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கேட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.
இதற்கு ஆட்சேபனைவெளியிட்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித்பண்டார வங்குரோத்து நிலை என்பது தவறு அதனை விலக்கிக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இது தீயநோக்கம் கொண்ட அறிக்கை என அவர் தெரிவித்தார்.
Post a Comment