பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் மெழுகுச் சிலை அகற்றம் - Yarl Voice பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் மெழுகுச் சிலை அகற்றம் - Yarl Voice

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் மெழுகுச் சிலை அகற்றம்



பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலுள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் உலகிலுள்ள முக்கிய தலைவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2000-ஆம் ஆண்டில் ரஷ்யஜனாதிபதி புடினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மெழுகுச் சிலை அகற்றப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை புட்டினின் மெழுகுச் சிலை கிடங்கு ஒன்றில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரின் சிலை களுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த புட்டினின் சிலைக்குப் பதிலாக உக்ரைன் ஜனாதிபதி  வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மெழுகுச் சிலையை வைக்க அருங்காட்சியகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அருங்காட்சியக இயக்குனர் யெவெஸ் டெல்ஹோமியோவ் கூறியதாவது:-

அருங்காட்சியகத்தின் வரலாற்றில் முதல்முறையாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக ஒரு சிலையை திரும்பப் பெறுகிறோம். புட்டினின் சிலை கடந்த வாரத்தில் பார்வையாளர்களின் தாக்குதலுக்கும் உள்ளானது.

புதின் சிலை இருந்த இடத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிடிப்பார். ரஷ்யாவை எதிர்த்ததற்காகவும், தனது நாட்டை விட்டு வெளியேற மறுத்ததற்காகவும் அவர் மக்கள் மத்தியில் ஹீரோவாகி விட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post