சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் சிங்கள அரசு தற்போதும் செயற்பட்டு வருகிறது என நாடளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், அரசியல் அமைப்புக்கு சாராமல் தயாரிக்கப்பட்டது தான் இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம். அன்று முதல் இன்று வரை அதனை பயன்படுத்தி தமிழ் மக்களைத் தான் பழிவாங்கிறார்கள். இப்போது சட்டத் திருத்தப்படுவதாக தெரிவித்து உலகை ஏமாற்றுகின்றனர்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு சட்டத்தை பயன்படுத்தி அரசு பழிவாங்குகின்றனர். இது தவிர பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம் என்று பலர் தெரிவித்த,எழுத்து மூலமான ஆவணங்களில் , நீல நிற பேனையால் வேண்டும் என்றும் அதாவது “டாம்”,”டும்’ (வேண்டாம் ,வேண்டும் ) என்று பல பக்கங்களில் வேண்டும் வேண்டும் என்று மாற்றியுள்ளனர்.- என்றார்.
Post a Comment