பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க ஆகியோரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
எரிசக்தி நெருக்கடி தொடர்பில் ஜனக ரத்நாயக்க வின் கருத்துகளால் சமூகத்தின் பார்வையில் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தாம் அவமானத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிவாயு நெருக்கடியைத் தீர்க்கத் தவறிய லிட்ரோ தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Post a Comment