இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்றிரவு முதல் எரிபொருள் கட்டணத்தை அதிகரித்தைத் தொடர்ந்து பாடசாலை வேன் கட்டணத்தை 1000 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வேன் நடத்துநர்கள் சங்கம் (AISVOA) தெரிவித்துள்ளது.
டீசல் இல்லாததால் சேவையைத் தொடர்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்ப நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது, இது மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட நிலையில், பாடசாலை வேன் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் பாடசாலை வேன் நடத்துநர்கள் இப்போது பெரும் சுமைக்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால் கட்டணங்களை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment