இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 13 பேர் யாழில் கைது!!! - Yarl Voice இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 13 பேர் யாழில் கைது!!! - Yarl Voice

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 13 பேர் யாழில் கைது!!!




திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பலாலி   கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள் , 3 பெண்கள் 5 சிறுவர்கள் மற்றும் பலாலி அண்ரனிபுரம பகுதியைச் சேர்ந்த ஓட்டி களான 2 ஆண்களும் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பின் ஊடாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு பிளாஸ்டிக் படகும் இணைப்பு இயந்திரம் மற்றும் எரிபொருள் வகைகளும் கட்டப்பட்டுள்ளன

கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர் , கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து  , அவர்களை சட்ட நடவடிக்கைக்காக   பலாலி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளன அவர்கள் இன்று மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் உட்படுத்தப்படுவார்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post