2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையை மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்,
இம்முறை இந்தப் பரீட்சைக்கு நான்கு இலட்சத்து 05 ஆயிரத்து 123 பாடசாலை விண்ணப்பதாரிகளும், 01 இலட்சத்து 10 ஆயிரத்து 367 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் விண்ணப்பத்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
எதிர்வரும் காலத்தில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. 03 தவணைகளையும் உள்ளடக்கிய வகையில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வருடம் ஒக்டோபர் 16 ஆம் திகதி 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
ஒக்டோபர் 17ஆம் திகதியிலிருந்து நவம்பர் 12ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையையும் நடத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment