தமிழ் மக்களுக்கு 73 வருடமாக செய்த கொடுமை, இப்போது சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாபமாக மாறிவிட்டது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மக்கள் தங்களின் வாழ்விற்காக வீதியில் இறங்கி போராடும் நிலை உருவாகி உள்ளது. புலிகளின் ஆயுத போராட்டம் கைவிடப்பட்டு 13 வருடங்கள் ஆகியும் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
தமிழர்களுக்கு விளைவித்த பாவக்கேடு தற்போது சாபக்கேடாக மாறி ஆட்சியாளர்களை மீண்டும் வீட்டிற்கு போக வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
நாட்டினை யார் ஆட்சி செய்தாலும் பரவாயில்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தது சுதந்திரமான அடிப்படை உரிமையினை பெற்று தருவதையே கேட்கின்றோம்.
மக்கள் வறுமைக்குள் சிக்குண்டு அழிவுற்றாலும் பிரச்சனை இல்லை. தங்கள் ஆட்சியை விட்டு விலகப்போவதில்லை என்று ஆளும் கட்சி அரசாங்கம் விடாப்பிடியாக உள்ளது என்றார்.
Post a Comment