பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 42 பேரை உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களுக்கு அமைய இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அனைவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment