காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக இணைந்துகொண்ட இரத்தினபுரி சிறிபாகம- குட்டிகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று இணைந்து கொண்டார்.
எவ்வாறாயினும், குறித்த அதிகாரியை தற்போது பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று கூட்டத்தில் உரையாற்றிய குறித்த பொலிஸ் அதிகாரி கூறியதாவது,
“இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க தொழில் செய்து பிழைப்பு நடத்துவது கண்ணியம், மரியாதை என என் மனைவியிடம் கூறியுள்ளேன்.
நாளை என்னை வேலையிலிருந்து நீக்கப் போகிறார்கள். நான் உறுதியாக இருக்கிறேன். நான் சோகமாக இல்லை. நான் கோபமாக இருக்கிறேன். என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று கோபமாக இருக்கிறது. அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”.
ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதற்கு பொலிஸாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்மால் எதுவும் பேசமுடியாது. இருந்தாலும் நான் இன்று சீருடையுடன் வருகை தந்து உங்கள் மத்தியில் பேசுவதற்கு காரணம் எனக்குள் வலி இருப்பதால் தான்.
எனக்கு தெரியும் நாளைக்கு நிச்சயமாக என் வேலை எனக்கு இல்லாமல் போகும்! நாளைக்கு ஒரு புதிய நாடு உருவானால் எமக்கு அல்ல எம் பிள்ளைகளுக்கே அது சொந்தம்.
நான் இங்கு வந்தது என் மனைவிக்கு தெரியாது. இன்று காலை 7 மணிக்கு தான் நான் வந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணியில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அருகில் கடமையாற்றிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தலையிட முயன்றார், ஆனால் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டு, போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளார்.
Post a Comment