யாழ், கிளிநொச்சியில் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை!! அங்கஜன் எம்பி - Yarl Voice யாழ், கிளிநொச்சியில் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை!! அங்கஜன் எம்பி - Yarl Voice

யாழ், கிளிநொச்சியில் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை!! அங்கஜன் எம்பி



யாழ், கிளிநொச்சியில் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை. அத்துடன் எனது பெயரை பயன்படுத்தி இடம்பெறும் முறைகேடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

எனது உரிமைத்துவத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்குவதாக வதந்திகளை பரப்புவோர் தொடர்பில் எனது கவனத்தை செலுத்தியுள்ளேன்.

இலங்கையின் எந்தவொரு பாகத்திலும் எனக்கு சொந்தமாகவோ பங்குகளாகவோ எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இல்லை என்பதை அனைவரின் கவனத்துக்கும் தெரியப்படுத்துகிறேன்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறுகின்ற முறைகேடுகளை இல்லாதொழிக்க உறவுநிலை பாரபட்சங்களுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளேன். அக்கடிதத்தில்,

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்குகின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கிடைக்கப்பெறும் எரிபொருட்களை விநியோகம் செய்வதில் சீரின்மை, பதுக்குதல் மற்றும் பரல்களில் மீள் விற்பனைக்காக வழங்குதல் (முக்கியமாக மண்ணெண்ணை) என்பன தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனை நிவர்த்தி செய்ய மாவட்ட செயலகத்தில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து,
தொலைபேசி இலக்கமொன்றை (Hotline) அறிவித்து, அவர் ஊடாக மக்களின் முறைப்பாடுகளைப் பெற்று அதனை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனூடாக எரிபொருள் விநியோகத்தில் இடம்பெறுகின்ற முறைகேடுகள் சீர் செய்யப்பட்டு மக்கள் வரிசையில் காத்துக் கிடப்பதனை தவிர்க்க முடியும்.

இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெறும் பட்சத்தில் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனது பெயரை பயன்படுத்தி தமது வர்த்தக,  அரசியல் தேவையை பூர்த்திசெய்ய முனைவோர், தமது வர்த்தகத்தின் பங்கினை எனக்கு சட்டரீதியாக வழங்கினால், அந்த வியாபார வருமானம் தொடர்பான கணக்குகளையும் நான் சமர்ப்பிக்க தயாராக உள்ளேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post