ஜனாதிபதி இராஜினாமா செய்துவிட்டு புதிய பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்துக்கு தற்காலிக ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம முன்மொழிந்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வில் ஜனாதிபதியின் அனைத்து செலவின மூலங்களும் துண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பிரேரணையிலும் கையொப்பமிடப் போவதில்லை எனவும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Post a Comment