இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் தவறுகளே இன்றைய பொருளாதார நெருக்கடி சூழலுக்கு காரணமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்
பா.கஜதீபன் தெரிவித்தார்.
இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மற்றொரு தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறையும் அதற்காக செலவழிக்கப்பட்ட நிதி எல்லாம் இணைந்த அரசாங்கத்தின் மிக மோசமான செயற்பாடுகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.இந்த நெருக்கடியை தமிழ் தேசிய இனம் நீண்டகாலமாகவே சந்தித்துள்ளதுடன் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளனர்.
நாட்டில் இருக்கக்கூடிய அரசுத் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடுகின்றனர்.
அப்படி இல்லாது போனால் இந்த போராட்டம் நீர்த்து போவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே இருக்கும்.
சர்வதேச நாணய நிதியம் மூலமாக நாடு பொருளாதார நெருக்கடியான சூழலில் இருந்து மீண்டாலும் பக்க விளைவுகளை நாட்டு மக்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கும். வரி அதிகரிப்பு,பொருள் விலை அதிகரிப்பு, அரசு ஊழியர்கள் உடைய எண்ணிக்கையைக் குறைத்தல், நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டும் நிலைமைகள் உருவாகும் நெருக்கடி ஏற்படும் என்றார்
Post a Comment