யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியை சேர்ந்த இளைஞனே கழுத்தில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது.
பிடியாணை உத்தரவை நிறைவேற்றும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரினால் இளைஞன் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் தனது உடமையில் இருந்த பிளேட்டினை எடுத்து, தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார் என கூறி பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Post a Comment