அரசாங்கத்தின் கையிருப்பில் போதியளவு நிதியிருப்பதாக தெரியவில்லை,தற்போது அரசாங்கம் கட்டணங்களை செலுத்துவதற்காக முன்னணி ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து பணத்தை பெறுகின்றது
பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது நாட்டில் அரசாங்கம் இல்லாத நிலை காணப்படுகின்றது என முன்னாள் பிரதமர் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது தற்போது இடம்பெறுவது நாட்டிற்கு பேரழிவு என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களாக நாடு பொருளாதார விடயங்களை அலட்சியம் செய்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் ஆட்சி முடிவிற்குவந்தவேளை கடன்களை செலுத்துவதற்கு பணமிருந்தது எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது நாட்டில் அரசாங்கம் இல்லை ,என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் கடந்த இரண்டு வாரங்களில் அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நாட தீர்மானித்துள்ளது,ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னர் நாங்கள் வளங்கள் அற்ற நிலைக்கு தள்ளப்படுவோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கையிருப்பில் போதியளவு நிதியிருப்பதாக தெரியவில்லை,தற்போது அரசாங்கம் கட்டணங்களை செலுத்துவதற்காக முன்னணி ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து பணத்தை பெறுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் எரிபொருள் கொள்வனவிற்கான இந்தியாவின் கடன் முடிவிற்குவரும் அதன் பின்னர் நாங்கள் மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்கொள்ளப்போகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment