பாகிஸ்தான்- ஆப்கானிற்கு இடையிலான உறவுகள் மாறிவரும் நிலையில் ஆப்கானில் பாக்கிஸ்தான் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் காரணமாக இரு நாடுகளின் மத்தியிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாக்கிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் அதிகரித்து வரும் நம்பிக்கையின்மையை எதிர்கொள்கின்றன - இதன் காரணமாக பரஸ்பரம் ஒருவரையொருவரு குற்றம்சாட்டும் நிலை காணப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானிலும் அதன் பல நகரங்களிலும் பாகிஸ்தான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன- பாகிஸ்தான் காரணமாக ஏமாற்றமடைந்த தலிபான்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தை கடுமையாக கண்டித்துள்ளதுடன் கடும் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளனர்.
பதிலுக்கு இஸ்லாமபாத்தும் கடுமையான பதிலடியை வழங்கியுள்ளதுடன் தலிபான்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2021 இல் தலிபான்கள் பாக்கிஸ்தானிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
இரு நாடுகளிற்கும் இடையில் சுமுக நிலையை ஏற்படுத்துவதற்காக தலிபானின் பேச்சாளர் பாகிஸ்தானுடனான உறவு மிக முக்கியமானது என தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் அமைச்சர் சேக்ரசீட் பாகிஸ்தானை இஸ்லாத்தின் பாதுகாவலன் என வர்ணித்தார் என செய்தி முகவர் அமைப்பொன்று தெரிவித்திருந்தது.
எனினும் விரைவில் உறவுகள் பாதிக்கப்பட்டன-எல்லை மோதல் இருநாடுகள் மத்தியிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துகின்றது-
இந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆப்கானின் டிடிபி பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
தற்போது பாகிஸ்தானின் விமானத் தாக்குதல் நிலைமையை மேலும் மோசமானதாக மாற்றியுள்ளது,ஆப்கானில் மாத்திரமல்லாமல் பிரான்ஸ் பிரிட்டனிலும் மக்கள் பாகிஸ்தானிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்- பாகிஸ்தான் பொதுமக்களை இலக்கு வைப்பதை அவர்கள் கண்டித்துள்ளனர்.
சனிக்கிழமை ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் குனார் பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்களில் 40க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்-பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை ஏற்கனவே காணப்பட்ட சீற்றத்தை அதிகரித்துள்ளது.
எல்லை மோதல்கள் - வான்வெளி மீறல்கள் ஆட்டிலறி பிரயோகங்கள் சமீப மாதங்களில் அதிகரித்துள்ளன.
ஆப்கானின் நிம்ரோஸ் மாகாண டுரண்ட் எல்லை பகுதியில் பாக்கிஸ்தானின் ஹெலிக்கொப்டர் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது-
Post a Comment