குறித்த கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
தென் பகுதியில் ஏற்பட்டுள்ள அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பில் உங்களை நாங்கள் புரிந்து கொள்கின்றோம் எங்களை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்னும் தொனிப்பொருளில் தமிழர் தரப்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் ஒருங்கிணைந்து தமிழ் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போது எதிர்வரும் காலங்களில் வடக்கின் ஏனைய மாவட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் குறித்த கலந்துரையாடல் கூட்டங்களில் கலந்து கொள்ளாத ஏனைய பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் ஆராய உள்ளதாக ஒன்றிணைந்த தமிழர் கூட்டமைப்பின் பிரதிநிதி தெரிவித்தார்
Post a Comment