ரம்புக்கனையில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது!நாமல் - Yarl Voice ரம்புக்கனையில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது!நாமல் - Yarl Voice

ரம்புக்கனையில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது!நாமல்



ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற வன்முறைகளிற்காக கவலை வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச அரசாங்கம் இவ்வாறான தாக்குதலை ஏற்றுக்கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்கு மேலதிகமாக, முச்சக்கர வண்டிக்கு பொலிஸார் தீ வைப்பது மற்றும் எரிபொருள் பவுசரை சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்களைக் காட்டுவது உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும் சம்பவம் தொடர்பான காணொளிகள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

சபாநாயகர் தலையிட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஊடகங்களுக்கு வெளியிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post