உரிமை கோரப்படாத நிலையில் ஆண்கள் இருவரது சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவ் விடயம் குறித்து மேலும் தெரிய வருவதாவது;
16.02.2022 அன்று யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தலைமன்னாரைச் சேர்ந்த மணிவேல் (64 வயது) என்பவரது சடலமும் 16.03.2022 அன்று பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அண்மையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் என இரு சடலங்கள் உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
எனவே உரியவர்கள் அடையாளப்படுத்தி சடலங்களை விரைவில் பொறுப்பேற்கும்படி யாழ்ப்பாணப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Post a Comment