வெளியிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் பொதுக் கூட்டங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னரைப் போன்று வெளியிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், இந்த அறிவுறுத்தல் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Post a Comment