ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்கள் இன்று மிக நீண்ட தூரத்திலிருந்து துவிச்சக்கரவண்டியில் அலுவலகத்திற்கு சென்றனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தாலேயே இவர்கள் துவிச்சக்கரவண்டியில் அலுவலகம் சென்றனர்.
குறிப்பாக சங்கானை மற்றும் சுழிபுரம் ஆகிய பிரதேசங்களிலிருந்து இரு உத்தியோகத்தர்கள் பல கிலோ மீட்டர் தூரம் கடந்து துவிச்சக்கரவண்டியில் அலுவலகத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment