இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் சமகாலப் போக்குகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment