யாழ்ப்பாணம் மிருசுவிலில் புகையிரத கடவையைக் கடக்க முற்பட்ட மகேந்திரா ரக வாகனத்தை யாழ்தேவி ரயில் மோதிய விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (22) காலை 10.15. மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயில் கொடிகாமம் - மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட மகேந்திரா ரக வாகனத்தை மோதிய விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment