அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் அத்தியவசிய பொருட்களின் உச்ச வெளியேற்றத்தால் சகல இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் தீர்வை முன்வைக்காத நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் மக்கள் வெறுமனே ஜனாதிபதி மற்றும் பிரதமரை வீட்டுக்கு அனுப்புமாறு போராட்டம் செய்யவில்லை.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ்மக்கள் எதிர்நோக்குகின்ற அரசியல்தீர்வு தொடர்பில் சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாட்டின் ஜனாதிபதியை பிரதமரை பதவி விலக வேண்டும் என சிங்கள மக்கள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாம் வீதிகளில் வழங்கியுள்ளோம்.
இலங்கையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் போதுதான் நாடு பொருளாதாரத்தில் திடமான ஒரு நிலையை அடையும் என அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment