பதவி விலகப் போவதில்லை – பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் – ஜனாதிபதி - Yarl Voice பதவி விலகப் போவதில்லை – பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் – ஜனாதிபதி - Yarl Voice

பதவி விலகப் போவதில்லை – பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் – ஜனாதிபதி


 
பதவிவிலகப்போவதில்லை ஆனால் நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மையை நிருபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி நேற்று ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சிரேஸ்ட தலைவர்களிடம்  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என நாடளாவியரீதியில் ஆர்ப்பாட்டங்கள் நேற்றும் இடம்பெற்ற அதேவேளை ஜனாதிபதி அரசியல் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

ஜனாதிபதி தான் பதவி விலகப்போவதில்லை ஆனால் 113 பெரும்பான்மைய நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என தெரிவித்தார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது எந்த கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட பலர் அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளதை தொடர்ந்து அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்துள்ளது.

எனினும் சாதாரண பெரும்பான்மையுடன் தொடர்ந்தும் ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சிகளில்  ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஈடுபட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post