வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையில் முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வெளிநாட்டில் வாசிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைத்து முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் பொருட்டு அரசாங்கம் 11 அம்ச கொள்கை திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.
மேலும் வட மாகாணத்தில் இரண்டு வருடத்தில் விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
அதுமட்டுமல்லாது பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்கள், கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் ,சமுத்தி பயனாளிகள் மற்றும் நிரந்தர வாழ்விடங்களை அற்றவர்கள் தொடர்பிலு தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது
வடக்கில் எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் என்பவற்றை தடையின்றி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
தீவக பகுதிகளின் தேவைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்ற நிலையில் அரச சேவையின் மூலம் மக்களிடமே தேடிச் சென்று குறை தீர்க்கும் கலாச்சாரம் மேலும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment