காபந்து அரசாங்கமொன்று உருவானால் எனது அமைச்சுபதவியை துறக்க தயார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் காபந்து அரசாங்கமொன்றிற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கினால் அரசியல் ஐக்கியத்திற்காக தனது பதவியை தியாகம் செய்ய தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிகளை தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானங்கள் எவ்வாறனதாகயிருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இது தேர்தலிற்கு செல்வதற்கான நேரமில்லை,காபந்து அரசாங்கம் உருவானால் அரசியல் கட்சிகளுடன் அரசியல் ஐக்கியத்திற்காக பதவி விலக தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள 11 கட்சி கூட்டணியும் தீவிரமாக வேண்டுகோள் விடுத்துள்ளதை அரசாங்கம் காபந்து அரசாங்கம் குறித்து ஆராய்ந்து வருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய தருணத்தின் தேவை பொருளாதார ஐக்கியமே என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச மின்சார எரிவாயு தட்டுப்பாடு போன்றவற்றிற்கு உடனடி தீர்வை காணவேண்டிய அதேவேளை நாடு முன்னோக்கி நகர்வதற்கு அரசியல் ஐக்கியம் அவசியம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment