வடக்கின் பெரும்போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு ஶ்ரீகரன் சாரங்கனும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு அன்டன் அபிசேக்கும் தலைமை தாங்குகின்றனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் மத்திய கல்லூரி அணித் தலைவர் ஶ்ரீ கரன் சாரங்கன் முதலில் பந்து வீச்சை தெரிவுசெய்த்துள்ளார்.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தற்பொழுது துடுப்பெடுத்தாடி வருகின்றது.
மதிய நேர ஆட்ட இடைவேளை வரை யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி 30 பந்துபரிமாற்றம் நிறைவில் 60 ஓட்டங்களை பெற்று ஒரு இலக்கினை இழந்துள்ளது.
குகனேஸ்வரன் ஹரிசன் 41 ஒட் டங்களை பெற்று ரன்அவுட் முறையில் ஆட்டம் இழந்துள்ளார்.
115வது வருடமாக இம்முறை போட்டி இடம்பெறுவதுடன் தொடர்ந்து 3நாட்கள் போட்டி இடம்பெறவுள்ளது.
Post a Comment