யாழ் எழுவைதீவில் காணி அளவீடு – தடுக்க ஒன்றினையுமாறு கோரிக்கை! - Yarl Voice யாழ் எழுவைதீவில் காணி அளவீடு – தடுக்க ஒன்றினையுமாறு கோரிக்கை! - Yarl Voice

யாழ் எழுவைதீவில் காணி அளவீடு – தடுக்க ஒன்றினையுமாறு கோரிக்கை!



காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாளையதினம்(6) புதன்கிழமை காலை 9மணிக்கு எழுவை தீவு பகுதியில் 4 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வலி வடக்கு மீள் குடியேற்றக் குழுவின் தலைவர் த.சஜீவன் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் குறிப்பாக வடகிழக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சூழலில் வாழும்போதும் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு காணி உரிமையாளர் எதிர்ப்பை தெரிவித்து இருப்பதால் அவருடன் சேர்ந்து பொது அமைப்புகள் அரசியல் பிரமுகர்கள் நாளை காலை 9 மணிக்கு நில அளவை தடுப்பதற்காக ஒன்றுகூட வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post