மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் நாட்டில் பாரிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என சங்கத்தின் செயலாளர் மருத்துவர் செனால் பெர்னாண்டோ இன்று (19) தெரிவித்தார்.
ஒரு பிரதேசத்தில் மாத்திரமன்றி நாடு பூராவும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தினால் முழு நாட்டுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் செனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இருதய நோயாளர்களின் பாதுகாப்புக்கு அவசியமான மூன்று வகையான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளி களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ள தாக மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment