பாவம் மனசு ஒடஞ்சி போய்ட்டாங்க’.. மறுபடியும் சொதப்பிய SRH.. வைரலாகும் காவ்யா மாறன் போட்டோ..! - Yarl Voice பாவம் மனசு ஒடஞ்சி போய்ட்டாங்க’.. மறுபடியும் சொதப்பிய SRH.. வைரலாகும் காவ்யா மாறன் போட்டோ..! - Yarl Voice

பாவம் மனசு ஒடஞ்சி போய்ட்டாங்க’.. மறுபடியும் சொதப்பிய SRH.. வைரலாகும் காவ்யா மாறன் போட்டோ..!



சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரியான காவ்யா மாறன் சோகமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்களும், தீபக் ஹூடா 50 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியிடம் ஹைதராபாத் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக ஹைதராபாத் அணியின் ராகுல் திருப்பதி 44 ரன்களும், நிக்கோலஸ் பூரான் 34 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணியை பொறுத்தவரை ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், க்ருணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியதால், அந்த அணியின் தலைமை செயல் அதிகாரியான காவ்யா மாறன் சோகமாக காணப்பட்டார். இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 முன்னதாக நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. அதனால் புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post