130 கிலோ கேரலா கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு - 2.5 கோடி பெறுமதி என மதிப்பீடு - Yarl Voice 130 கிலோ கேரலா கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு - 2.5 கோடி பெறுமதி என மதிப்பீடு - Yarl Voice

130 கிலோ கேரலா கஞ்சா கிளிநொச்சியில் மீட்பு - 2.5 கோடி பெறுமதி என மதிப்பீடு



130 கிலோ கேரலா கஞ்சா கிளிநொச்சியில் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளின் பெறுமதி இலங்கை மதிப்பில் 2.5 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பொதிகள் ஜெயபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post