தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்து அசத்தியுள்ளார்.
இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இவ்வாண்டுக்கான தேசிய ரீதியான 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூப்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இப் போட்டியில் வடமாகாணம் சார்பில் சற்குணம் காண்டீபன் மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவரை எதிர்த்து விளையாடினார்.
இதில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் சம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
சற்குணம் காண்டீபன் தனதாக்கிய சம்பியன் பட்டம் வடமாகாணத்திற்கு 43 வருடங்களின் பின் கிடைத்த சம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment