வடமராட்சி கடற்பரப்பில் கடற்படைப் படையினரின் படகு மோதி கடற்தொழிலாளர் சங்கத் தலைவரின் படகு சேதமடைந்துள்ளது.
(01)இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே சேதமடைந்துள்ளது.
படகு சேதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற்தொழிலாளிகள் இருவரையும் சில நிமிடங்கள் கழித்து கடற்படையினர் படகுடன் இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர்.
சம்பவத்தில் கடற்படையின் படகு மோதியதனால் தனது படகு மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளதாகவும் 10 லட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடற்தொழிலாளர் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
Post a Comment