மைக்கல் நேசக்கரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!! - Yarl Voice மைக்கல் நேசக்கரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!! - Yarl Voice

மைக்கல் நேசக்கரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு!!





நெல்லியடி மைக்கல் நேசக்கரத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் அதன் தலைவர் வேணுகானன் தலமையில் இடம் பெற்றுள்ளது.

முதல் நிகழ்வாக விருந்தினர்கள் வீதியிலிருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

மங்கல விளக்குகளை யாழ் தினக்குரல் ஆசிரியர் ஆ .சபேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களான் பிரதிக் கல்விப்பணிப்பாளர் செல்வி ஜனனி சிவப்பிரகாசம், மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை ஓய்வு நிலை அதிபர்  திருமதி - சு.செல்வமலர்,
காட்லிக் கல்லூரி ஓய்வு நிலை அதிபர் கி.கலைவதனி,  
பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற வழக்கு தொடுனர்  ஆர்.புஸ்பகாந்தன்,
மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய தலைவர் எஸ்.சிறிசண்முகதேவ், மற்றும் பயனாளிகள் என பலரும் ஏற்றி வைத்துடன் கருத்தரைகளையும் வழக்கிவைத்தனர்.

மேலும்  தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் நாற்பது பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் தெரிவு செய்யப்பட்ட நூற்றிற்க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் நாளாந்தம் வருமானம் குறைந்த பல குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.














0/Post a Comment/Comments

Previous Post Next Post