எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானம்!!! - Yarl Voice எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானம்!!! - Yarl Voice

எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானம்!!!



இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவுக்கும், ஆட்டோவுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும்.

அதேபோல கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 10,000 ரூபாவுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ,பொது போக்குவரத்து சேவை வழங்கும் பஸ்கள், லொறிகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட மாட்டாது எனவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post