நாட்டின் சில நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் மற்றும் வீடுகள் தீ வைத்து எரிக்கப் பட்டுள்ளன.
மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண் டோவின் வீட்டிற்கு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளனர்.
மொரட்டுவை வில்லோரவத்த பிரதேசத்தில் உள்ள இவரது வீட்டிற்கு வந்த குழுவொன்று அவரது வீட்டை தாக்கி தீ வைத்து எரித்துள்ளதாகவும் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (09) மொட்டுக் கட்சி ஆதரவாளர்களால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட அரசியல்வாதியான உதேனி அத்துகோரலவின் வீடும் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் வீடும் சனத் நிசாந்தவின் வீடும் எதிர்ப்பாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
மேலும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வில்கொட காரியாலயமும் அங்கிருந்த வாகனங்களும் சேதப்படுத் தப்பட்டுள்ளன.
Post a Comment