யாழ் டக்கா வீதியில் அமைந்துள்ள நரிக்குண்டு குளம் அல்லது பிள்ளையார் குளம் என அழைக்கப்படும் குளத்தில் தொடர்ச்சியாகத் தனியார் நிறுவனம் ஒன்று தனது வீதி வேலைக்காக தொடர்ச்சியாக நீரை எடுத்துவருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக அண்மையில் பெரு நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த குளம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
குறித்த குளம் புனரமைக்கப்படும் போது குளத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மண் மீண்டும் குளத்தின் உற்புற இருமருங்கிலும் போடப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவ்வாறான நிலையில் பல இலட்சம் ரூபா செலவில் குளத்தின் புனரமைப்புக்கள் அனைத்தும் முடிவுற்று அழகுற காட்சியளிக்கும் நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று குறித்த குளத்திலிருந்து தொடர்ச்சியாக பல ஆயிரம் லிட்டர் நீரை தினமும் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.
இவ்வாறு தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் யாழ் நகரத்தின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு அதிக உவர்த்தன்மையாகக் கூடிய சூழ்நிலையும் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகவே யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட குறித்த குளமானது ஏற்படுத்தப்பட்ட தன் நோக்கத்தை விடுத்து வீதி புணரமைப்பு இல்லேப்பா ஈடுபடும் தனியார் நிறுவனத்திற்கு நீர் எடுக்கும் ஒரு இடமாக மாறி இருப்பது தமக்கு கவலை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ஜெயசீலனை தொடர்பு கொண்டபோது குறித்த குடத்திலிருந்து நீர் எடுப்பதற்கு தாம் எவருக்கும் அனுமதி வழங்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment