கொள்ளையடிக்க மூதாட்டியை வெட்டி காயப்படுத்திய கும்பல்.. தெல்லிப்பளையில் சம்பவம்.
யாழ் தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டியிடம் கொள்ளையடிப்பதற்காக வாளால் வெட்டிய நிலையில் மூதாட்டி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பழை வித்தக பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
குறித்த பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியிடம் கொள்ளை இடுவதற்காக மூவர் கொண்ட குழு வீட்டுக்குள் நுழைந்தது.
கொள்ளையர்கள் அவதானித்த மூதாட்டி சத்தமிட்ட போது கொள்ளையர்கள் வாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment