யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறிய தாதியர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவமும், சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.
இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி திருமதி தெய்வி தபோதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பதிவாளர் வி.காண்டீபன், யாழ்ப்பாண தாதிய பயிற்சிக்கல்லூரி அதிபர் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தாதியருக்குச் சின்னங்களை அணிவித்தனர்.
Post a Comment