இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் – பிரான்பற்று பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீயில் சிக்கிய சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறுமி தீயில் சிக்கியதை அவதானித்த வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சிறுமியை மீட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சடலம் சங்கானை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் மகாஜனா கல்லூரியில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்கும் சுதன் சதுர்சியா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தீ ஏற்பட்டதை க்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment