பொதுமக்கள் அமைதி காக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளார்.
குறித்த பதிவில் "உணர்ச்சிகள் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மற்றும் வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் இருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment