இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகிலும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலும்
முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் போது அது தொடர்பான விழிப்புணர்வுக் கையேடும் விநியோகிக்கப்பட்டது.
Post a Comment