ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு (2023) விளையாட உள்ளதாக மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
43 வயதான கிறிஸ் கெயில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு வயதாகிவிட்டது தான் காரணம் என கூறப்பட்டது.
ஆனால், அதற்கான காரணமே வேறு என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் எனக்கான மரியாதை கிடைப்பதில்லை. கிரிக்கெட்டுக்காக நான் எவ்வளவோ செய்துள்ளேன். ஆனால் அதனை யாரும் நினைத்து கூட பார்த்த மாதிரி தெரியவில்லை. அதனால் தான் இனி ஐபிஎல் தொடரில் விளையாட தேவையில்லை என்று முடிவு எடுத்து ஏலத்தில் பங்கேற்கவில்லை.
மீண்டும் வருகிறேன்....!
கிரிக்கெட்டுக்கு பிறகு ஒரு வாழ்க்கை உள்ளது. அந்த வாழ்க்கையை வாழ தற்போது பழகி கொள்கிறேன். ஆனால் அந்த போட்டி முடிவதற்குள் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட முடிவு எடுத்துள்ளதாக கிறிஸ் கெயில் அவரை பேட்டி எடுத்தவரையே அதிர்ச்சிக் குள்ளாக்கினார். நான் மீண்டும் ஐபிஎலில் விளையாட போகிறேன். அவர்களுக்கு நான் தேவை.
ஐபில் தொடரில் இதுவரை நான் கேகேஆர், ஆர்சிபி, பஞ்சாப் என 3 அணிகளுக்காக தான் விளையாடி இருக்கிறேன்.
இதில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிக்காக மீண்டும் விளையாடி சம்பியன் பட்டத்தை வென்று தர வேண்டும் என நினைக்கிறேன். ஆர்சிபியில் இருக்கும் போது தான் எனது வெற்றிக்கரமான ஆண்டுகளாக இருந்தது. பஞ்சாப் அணியும் நன்றாக தான் இருந்தது.
எனக்கு புதிய விசயங்கள் செய்ய பிடிக்கும். பார்ப்போம் என்ன நடக்கிறது என்று கெயில் கூறினார்.
இதுவரை 142 போட்டியில் விளையாடிய கெயில் 4965 ஓட்டங்களை அடித்துள்ளார். இதில் அதிகபட்ச ஓட்டமாக 175 ஓட்டங்கள் ஆகும். கடந்த ஆண்டில் கூட 10 போட்டியில் விளையாடி 193 ஓட்டங்களை அடித்தார். அதற்கு முந்தைய சீசன் 7 போட்டிகளில் விளையாடி 288 ஓட்டங்களை அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment