பங்களாதேஷ்ஸை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை - Yarl Voice பங்களாதேஷ்ஸை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை - Yarl Voice

பங்களாதேஷ்ஸை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை



வங்காளதேசத்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் இலங்கையின் அசிதா பெர்னாண்டோ இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்தி அசத்த  பங்களாதேஷ்ஸை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை.

இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்தது பங்காளதேஷ்அணி.

வங்காளதேசம் முதல் இன்னிங்சில்  365 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
 முஷ்பிகுர் ரஹீம் 175 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் . 
லிட்டன் தாஸ் 141 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இலங்கை சார்பில் ரஜித 5 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 506 ஓட்டங்களுக்கு   சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மேத்யூஸ் 145, சண்டிமால் 124 , கருணரத்னே 80 ஓட்டமும் எடுத்தனர்.

பங்களாதேஷ் சார்பில் ஹொசைன் 4 விக்கெட், ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து, இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 169 ஓட்டத்தில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஷகிப் அல் ஹசன் 58 , லிட்டன் தாஸ் 52 ஓட்டமும் எடுத்தனர்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 6 விக்கெட், ரஜித 2 விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, இலங்கை அணி 3 ஓவரில் வெற்றிக்கு தேவையான 29 ஓட்டங்களை எடுத்தது. அத்துடன், டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post