எதிர்க்கட்சிகளை மக்கள் ஏன் தாக்குகிறார்கள்? - ஹரின் பெர்னாண்டோ - Yarl Voice எதிர்க்கட்சிகளை மக்கள் ஏன் தாக்குகிறார்கள்? - ஹரின் பெர்னாண்டோ - Yarl Voice

எதிர்க்கட்சிகளை மக்கள் ஏன் தாக்குகிறார்கள்? - ஹரின் பெர்னாண்டோ



எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற போதிலும், பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் தாம் ஏமாற்றமடைவதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் தாம் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிச் சென்ற போது பல எதிர்ப்பாளர்கள் வாகனங்களைத் தடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எப்பொழுதும் மக்களின் உரிமைகளுக்காக நிற்கும் தனது பிரிவினருக்கு பொதுமக்கள் ஏன் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படும் சில குழுக்கள் மக்களின் போராட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கத்தை சிதைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post